• english
  • sinhala
  • tamil
X

Vallibel Finance

Sitemap

எம்மைப்பற்றி

வெலிபல் பினான்ஸ், வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான, பணத்துக்கேற்ற பெறுமதியைப் பெற்றுத்தரும் நிதித்தீர்வுகளை வழங்குவதில் முதன்மை வகிக்கும் ஒரு நிதி நிறுவனமாகும். 14 வருடங்களுக்கும் அதிககால வெற்றிகரமான வணிக நடவடிக்கைகள் என்ற மைல்கல்லை நிறுவனம் எட்டியுள்ளது. எமது ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, அத்துடன் எமது வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை என்பவற்றுக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் நிறுவனத்தின் விசேடத்துவம் சான்றாகும்.

வெலிபல் பினான்ஸ்; கடந்த 14 வருடங்களில் அதீத வளர்ச்சிக்கான இதுவரைக் கால சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளது. சவால்களும் அழுத்தங்களும் மிகுந்த காலப்பகுதியில் தரம் மற்றும் பரிமாணம் என இரண்டின் அடிப்படையிலும் சிறந்த வெளிப்படுத்துகையை எம்மால் பதிவுசெய்ய முடிந்திருப்பதோடு, துறையின் முன்னுதாரண நிதி நிறுவனமாக நாம் நிலைத்திருக்கின்றோம். இது எமது தன்னிகரற்ற ஊழியர்களின் ஆற்றல், எமது பலம், எமது அர்ப்பணிப்பு, தொடர்ச்சியாக எம்மை மேம்படுத்திக் கொள்வதிலுள்ள ஆர்வம், மற்றும் மிகச் சிறப்பாக செயற்படும் எமது மூலோபாயங்களின் நடைமுறைப்படுத்தல் என்பவற்றிற்கு கிடைத்த பெறுபேறு எனலாம்.

நிறுவனத்தின் பரந்தளவிலான மற்றும் புத்தாக்கமான நிதித் தீர்வுகள் இலங்கை முழுவதுமுள்ள சமூகங்களைச் சேர்ந்த வெவ்வேறுபட்ட அங்கத்தவர்களின் பலதரப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் 55 கிளைகளுக்கும் மேற்பட்ட கிளைகளோடு, அர்ப்பணிப்பும் விசுவாசமும் மிக்க நிறுவனத்தின் 1200 பேர் அடங்கிய அணியினர் எமது வாடிக்கையாளர்களுக்கு அதியுச்ச சேவை தராதரங்களைப் வழங்குவதற்காக பயிற்றுவிக்கப்பட்டிருப்பதோடு, தரமான சேவை மற்றும் அதிசிறந்த தொழில் நிபுணத்துவம் என்பன உறுதி செய்யப்படுகின்றன.

கடந்த வருடங்களாக, நாம் தொழில் முயற்சியாளர்கள் முதல் பாரிய நிறுவனங்கள் வரை, மற்றும் சிறிய வணிகங்கள் முதல் வீடளவில் முன்னெடுக்கப்படும் வியாபாரங்கள் வரை பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வந்திருப்பதோடு, வெற்றிகரமான மற்றும் திருப்திகரமான சேவையை உறுதி செய்துள்ளோம். நிதித்துறையில் எமது வளர்ச்சிப் பயணத்தை தொடரும்போது பிரத்தியேக சந்தைப் பிரிவுகளின் நிதித் தேவைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதோடு, அதனை முன்னிட்டு புத்தாக்கமான சேவைகள் மற்றும் புதிய சேவைப் பிரிவுகளை வழங்குகின்றோம்.

about-us

வருடத்தின் சிறந்த வர்த்தக நாமம் - 2021, துரிதமாக வளரும் வாகன நிதிச்சேவை நிறுவனம், புத்தாக்கமிகு நிதிச்சேவை உற்பத்திகள் - வெலிபல் ஒடோ ட்ராப்ட் மற்றும் வீல் ட்ராப்ட் என நாம் சுவீகரித்த சர்வதேச அங்கீகாரங்கள் வெலிபல் பினான்ஸ் இனது தற்போதைய நிலை, கடந்தகால பங்களிப்புகள் மற்றும் எதிர்கால சாத்தியங்களை எடுத்துச் சொல்லும். இதற்கு மேலதிகமாக நிறுவனம் தொடர்ச்சியாக பல உள்நாட்டு விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்று வருகின்றது. Lanka Monthly Digest (LMD) இனால் 'அதிக நன்மதிப்புக்குரிய நிதி நிறுவனம்' ஆக பெயரிடப்பட்டமை நிறுவனத்தின் சாதனைகளது பெருமிதமான தருணங்களில் ஒன்றாகும்.

வெலிபல் பினான்ஸ் எமது தனித்துவமான உற்பத்திகளின் தொகுதியை மேலும் பல்வகைப்படுத்தி, செயற்திறன்மிக்க, சௌகரியமான சேவையை இலங்கை மக்களுக்குப் பெற்றுத் தருவதற்காக எமது கிளை வலையமைப்பை தொடர்ச்சியாக விஸ்தரித்தல் என்பவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது. மிக ஸ்திரமான சொத்து மூலதனமாக ரூ.73 பில்லியனை நிறுவனம் கொண்டிருப்பதோடு வைப்பு மூலதனமாக ரூ.40 பில்லியனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நிறுவனம் அவதானம் செலுத்திவரும் இலாபகரமான வளர்ச்சி என்பது எதிர்கால வளர்ச்சி மூலோபாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மிகப்பொருத்தமான ஒரு அடித்தளமாக அமையும்.

வெலிபல் பினான்ஸ் பிஎல்சி நாடெங்குமுள்ள எமது பங்குதாரர்களுக்கான மதிப்பு உருவாக்கத்தை உறுதி செய்யும் அதேவேளை, நிதிச்சேவை துறையில் பாரிய ஒரு தாக்கத்தை மேற்கொள்வதற்குத் தயாராகவுள்ளது.

குறிக்கோள்

எமது நாட்டின் நிதிச்சூழலை மாற்றியமைத்தல், அதிக இடங்களிலிருந்து அதிகளவு மக்களை பங்குதாரர்களாக இணைத்துக்கொண்டு தேசிய எழுச்சியை உருவாக்குதல். உதவி தேவைப்படும் மக்களை சென்றடைவதற்காக நாம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நோக்கம்

எமது கொள்கைகளில் மக்களின் இதயத்துடிப்பை அறிந்த நிதிசார் சேவைத் தொகுதியை உருவாக்கி வழங்குவதற்கான அயராத உழைப்பு அடங்கியுள்ளது. நிதிசார் செயன்முகாமை தொடர்பான பொறுப்புணர்வு அத்துடன் எமது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் எமது நாடு தொடர்பான பொறுப்புகூறல் என நாம் செய்யும் அனைத்திலும் விசேடத்துவம் என்பதே எப்பொழுதும் எமது தேடலாக உள்ளது.ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ

© for Vallibel Finance by: 230 interactive