வெலிபல் போனஸ் லீஸ், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முறையில் போனஸ் ஒன்றைப் பெற்றுத்தருவதற்காக அவர்களது லீசிங் கட்டுப்பணத்தில் ஒரு மாத நீக்கத்தை பரிசளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.
இப் பிரபலமான போனஸ் திட்டமானது வழமையாக பண்டிகைக் காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் பெற்றுத்தரும் முறையை அடிப்படையாகக் கொண்டு, புத்தாண்டு மற்றும் நத்தார் காலத்திற்கான போனஸ் ஒன்றாக உருவாக்கப்பட்டது. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களை லீசிங் கட்டணங்களில் இருந்து விடுவிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விடயமாக அமையும் என வெலிபல் பினான்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. இத் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்கும் விதமாக, வாடிக்கையாளர்கள் தாம் விரும்பிய எந்தவொரு மாதத்திலும் போனஸ் கட்டுப்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் விதமாக பின்னர் மாற்றியமைக்கப்பட்டது.
அதிலிருந்து வாடிக்கையாளர்கள் காப்புறுதிக் கொடுப்பனவுகளை கட்ட வேண்டிய மாதமானது பெரும்பாலான வாடிக்கையாளர்களின் தெரிவாக அமைந்தது. வெலிபல் பினான்ஸ் தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கான வழிகளை தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கும்.
ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ
© for Vallibel Finance by: 230 interactive